/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தக்கை பூண்டு விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
/
தக்கை பூண்டு விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜன 29, 2025 11:56 PM
உத்திரமேரூர் ; உத்திரமேரூர் வட்டாரத்தில், 73 ஊராட்சிகளில் பெரும்பாலும் விவசாய தொழிலையே சார்ந்து வாழ்கின்றனர்.
நெல், வேர்க்கடலை, கரும்பு ஆகியவற்றை பயிர் செய்து வருகின்றனர். அவ்வாறு பயிர் செய்யும்போது விவசாயிகள் பெரும்பாலானோர், செயற்கை உரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், மண்ணில் உள்ள சத்துக்கள் குறைந்து, மண்புழுக்களும் அழிந்து வருகின்றன.
இதை தவிர்க்க, செயற்கை உரங்களுக்கு பதிலாக, இயற்கை உரமான தக்கை பூண்டு விதைகளை பயன்படுத்த வேளாண் அலுவலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, உத்திரமேரூர் வேளாண் உதவி இயக்குநர் முத்துலட்சுமிகூறியதாவது:
தமிழக முதல்வரின், 'மண்ணுயிர் காத்துமன்னுயிர் காப்போம்' திட்டத்தில், 2024 --- 25ம் நிதியாண்டில், இயற்கை உரமான தக்கை பூண்டை மானிய விலையில் பெற்று, பயிர் செய்வதற்கு முன் தக்கை பூண்டை பயன்படுத்தி மண்வளத்தை காக்க வேண்டும்.
இதுதொடர்பாக, உத்திரமேரூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தை அணுகி, 1 ஏக்கருக்கு 20 கிலோ தக்கை பூண்டை, 995 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தற்போது, உத்திரமேரூர், சாலவாக்கம், திருமுக்கூடல் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில், 5.90 டன் தக்கை பூண்டு விதை இருப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.

