/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விவசாயிகள் கூட்டம் 20ம் தேதிக்கு மாற்றம்
/
விவசாயிகள் கூட்டம் 20ம் தேதிக்கு மாற்றம்
ADDED : பிப் 15, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், நாளை, காலை 10:00 மணிக்கு, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, வரும் 20ம் தேதி, காலை 10:30 மணிக்கு, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு, வருவாய், மின்வாரியம், வங்கி தொடர்பான குறைகள் மற்றும் கோரிக்கைகளை, விவசாயிகள் நேரடியாகவும், மனுவாகவும் அளிக்கலாம்.

