/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் கொள்முதல் நிலையத்தை தனியார் நடத்தக்கூடாது; விவசாயிகள் மறியல்
/
நெல் கொள்முதல் நிலையத்தை தனியார் நடத்தக்கூடாது; விவசாயிகள் மறியல்
நெல் கொள்முதல் நிலையத்தை தனியார் நடத்தக்கூடாது; விவசாயிகள் மறியல்
நெல் கொள்முதல் நிலையத்தை தனியார் நடத்தக்கூடாது; விவசாயிகள் மறியல்
ADDED : செப் 04, 2025 03:11 AM

காஞ்சிபுரம்:நெல் கொள்முதல் நிலையத்தை, தனி நபர்கள் நடத்தக்கூடாது என, விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த, காலுார் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இதை, ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர், தனிப்பட்ட முறையில் நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்முதல் நிலையத்தை, தனி நபர்கள் நடத்தக்கூடாது என, களக்காட்டூர், காலுார், விச்சந்தாங்கல் ஆகிய கிராம விவசாயிகள், காஞ்சிபுரம் - -உத்திரமேரூர் சாலையில், நேற்று நெல் மூட்டைகளுடன் மறியலில் ஈடுபட்டனர்.
மாகரல் போலீசார் கிராம விவசாயிகளிடம் பேச்சு நடத்தி, சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.