/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேனம்பாக்கம் கிராம நத்தம் இடத்தை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு
/
தேனம்பாக்கம் கிராம நத்தம் இடத்தை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு
தேனம்பாக்கம் கிராம நத்தம் இடத்தை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு
தேனம்பாக்கம் கிராம நத்தம் இடத்தை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு
ADDED : செப் 04, 2025 03:09 AM

காஞ்சிபுரம்:கிராம நத்தம் காலி இடத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, சப் - -கலெக்டரிடம் தேனம்பாக்கம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், தேனம்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு, நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் சிலருக்கு, வருவாய் துறை நிர்வாகம் ஏற்கனவே வீட்டுமனை பட்டாக்கள் அளித்துள்ளன.
நத்தம் காலி இடத்தில், அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு, சமீபத்தில் பூமி பூஜை போட்டனர். அதை ஒட்டி இருக்கும் இடம் எங்களுக்கு சொந்தம் என, தனி நபர் ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார்.
அவர் ஆக்கிரமித்து இருக்கும் இடத்தை அகற்றி, கிராம பொது பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, காஞ்சிபுரம் சப் - -கலெக்டரிடம் தேனம்பாக்கம் மக்கள் மனு அளிக்க வந்தனர்.
காஞ்சிபுரம் சப் - -கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்யா, தேனம்பாக்கம் கிராம மக்களிடம் நேற்று பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தி அனுப்பினார்.
பின், அவர் கூறியதாவது:
'கிராம நத்தம் இடம், குடியிருப்போருக்கு மட்டுமே பட்டா வழங்கும் நடைமுறை உள்ளது. பொது பயன்பாட்டிற்கு கிராம நத்தத்தை பயன்படுத்த முடியாது. குடிசை போட்டிருந்த இடத்தில், அவருக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதை, ரத்து செய்ய முடியாது.
நீங்கள் அளித்த மனுவின் அடிப்படையில், காலி கிராம நத்தம் பகுதியில், இனி யாருக்கும் பட்டா வழங்காமல் இருக்க ப ரிந்துரை செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.