/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் கொள்முதல் நிலையம் துவங்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
நெல் கொள்முதல் நிலையம் துவங்க விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் கொள்முதல் நிலையம் துவங்க விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் கொள்முதல் நிலையம் துவங்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 30, 2025 12:30 AM
வாலாஜாபாத், கம்பராஜபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட கம்பராஜபுரம் பகுதியில், சொர்ணவாரி பட்டத்திற்கு ஏரி மற்றும் கிணற்று பாசனம் மூலம், 300 ஏக்கர் பரப்பிலான நிலத்தில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.
மேலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் பல ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் பயிரிட்டுள்ள நெல்லை அறுவடைக்கு பின், கம்பராஜபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொள்முதல் செய்வது வழக்கம்.
தற்போது கம்பராஜபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், நெல் கொள்முதல் நிலையம் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.
இதனால், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்து உள்ளனர்.
மழை நேரங்களில் நெல் நனைந்தும், வெயிலால் காய்ந்தும் போகும் என, விவசாயிகள் இடையே கவலை உள்ளது.
எனவே, கம்பராஜபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

