/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடல் கல்லேரி குளத்தை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
திருமுக்கூடல் கல்லேரி குளத்தை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
திருமுக்கூடல் கல்லேரி குளத்தை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
திருமுக்கூடல் கல்லேரி குளத்தை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 06, 2025 02:15 AM

உத்திரமேரூர்:திருமுக்கூடல் கல்லேரி குளத்தை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றி யம், திருமுக்கூடல் கிராமத்தில் பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் எதிரே கல்லேரி குளம் உள்ளது.
இந்த குளம், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. இக் குளத்து தண்ணீர், கால்நடைகளுக்கு குடி நீராக பயன்பட்டு வந்தது. தற்போது, குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
குளத்தில் கோரை புற்களும், முட்செடிகளும் வளர்ந்துள்ளன. இதனால், குளத்தில் கால்நடைகள் இறங்கி தண்ணீர் குடிக்க முடியாத நிலை உள்ளது.
மேலும், குளத்தில் மண் துார்ந்து இருப்பதால், தண்ணீரை போதிய அளவு சேமிக்க முடியவில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லேரி குளம் துார்வாரப்படாமல் உள்ளது.
எனவே, திருமுக் கூடல் கல்லேரி குளத்தை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.