/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் காத்திருக்கும் நிலை
/
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் காத்திருக்கும் நிலை
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் காத்திருக்கும் நிலை
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் காத்திருக்கும் நிலை
ADDED : மார் 18, 2024 03:35 AM

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்டத்தில், நவரை பருவத்தில், 68,238 ஏக்கர் நிலங்களில், நெல் சாகுபடி செய்து உள்ளனர். உத்திரமேரூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய வட்டாரங்களில், நெல் அறுவடை செய்யும் பணியை, விவசாயிகள் துவக்கி உள்ளனர்.
இந்த நெல்லை நெற்களம், சாலை ஓரம், வீடுகள் ஆகிய பல்வேறு இடங்களில் சேமித்து வைத்துள்ளனர். நெல் கொள்முதல் நிலையங்களில் துவங்கியபின், விற்பனை செய்ய நெல்லை தயாராக வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன. கீழ்பேரமணல்லுார் கிராமத்தில், சிறு, குறு மற்றும் ஊரக தொழில் நிறுவனங்களின் அமைச்சர், கலெக்டர் ஆகியோர் நெல் கொள்முதலை துவக்கி வைத்தனர்.
இன்னமும், பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் முழுமையாக துவக்காததால், பரந்துார், கம்மவார்பாளையம், கொட்டவாக்கம் ஆகிய கிராம சாலை ஓரம் நெல்லை கொட்டிவைத்துவிட்டு, காவல் காத்திருக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதற்கட்டமாக, 12 நெல் கொள்முதல் நிலையங்கள். அடுத்ததாக, 25 நெல் கொள்முதல் நிலையங்கள் என, 37 நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு கழகத்தினர் கட்டுப்பாட்டில், சில நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அனைத்து நெல் கொள்முதல் நிலையத்திலும் நெல் கொள்முதல் துவக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

