/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்வரத்து கால்வாயை சீரமைக்காததால் வெள்ள நீரில் மூழ்கிய விளைநிலங்கள்
/
நீர்வரத்து கால்வாயை சீரமைக்காததால் வெள்ள நீரில் மூழ்கிய விளைநிலங்கள்
நீர்வரத்து கால்வாயை சீரமைக்காததால் வெள்ள நீரில் மூழ்கிய விளைநிலங்கள்
நீர்வரத்து கால்வாயை சீரமைக்காததால் வெள்ள நீரில் மூழ்கிய விளைநிலங்கள்
ADDED : டிச 16, 2024 02:35 AM

உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் ஏரியிலிருந்து, மருத்துவன்பாடி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய், 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமலும், செடி, கொடிகள் முளைத்தும் உள்ளன.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக பெய்த கன மழையால், திருப்புலிவனம் ஏரி முழுதும் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்த நீரானது மருத்துவன்பாடி நீர்வரத்து கால்வாயில் மூன்று நாட்களாக வந்து கொண்டிருக்கிறது.
அவ்வாறு வரும் நீரானது, கால்வாய் சீரமைக்கப்படாததால், அருகிலுள்ள விளை நிலங்களில் பாய்ந்து, கரும்பு பயிர் தோட்டத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து வெள்ள நீர் வந்துகொண்டு இருப்பதால், கரும்பு பயிர் சேதமடையும் நிலை உள்ளது. தொடர்ந்து, வெள்ளநீர் வடிய வழியை ஏற்படுத்தவும், கால்வாயை சீரமைக்கவும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
நீர்வரத்து கால்வாய் நீண்ட ஆண்டுகளாக சீராமைக்கப்படாமல் உள்ளது. இதனால், ஆண்டுதோறும் மழை வெள்ள நீரானது, விளைநிலங்களில் பாய்ந்து, பயிர் சேதமடைந்து வருகிறது.
இது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, மூன்று நாட்களாக நீரானது தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால், விளை நிலங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீர் வடியாமல் உள்ளது.
இதனால், கரும்பு பயிர் முழுதுமாக சேதமடையும் நிலை உள்ளது. எனவே, நீர்வரத்து கால்வாயை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.