/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தந்தை - மகன் கைது 42 கிலோ குட்கா பறிமுதல்
/
தந்தை - மகன் கைது 42 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : பிப் 05, 2025 12:29 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் காவல் எல்லைக்குட்பட்ட கிறிஸ்துவ மேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து, குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்து.
அன்படி, நேற்று காலை அங்கு சென்ற போலீசார், வடமாநில தொழிலாளர் தங்கியுள்ள அறை மற்றும் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த ‛டாடா ஏஸ்' வாகனத்தில் சோதனை நடத்தினர், இதில், நான்கு மூட்டையில் 42 கிலோ ஹான்ஸ், ஸ்வாகத், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, எச்சூர் கிராமத்தைச் சேர்ந்த குமார், 60, அவரது மகன் சுரேஷ், 36, இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், ஆந்திராவில் இருந்து மொத்தமாக குட்கா பொருட்களை வாங்கி வந்து, ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரங்களில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்தது தெரிந்தது.
மேலும், இவர்கள் மீது ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.