/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மணிமங்கலம் சாலை மீடியனில் சுற்றித்திரியும் மாடுகளால் பீதி
/
மணிமங்கலம் சாலை மீடியனில் சுற்றித்திரியும் மாடுகளால் பீதி
மணிமங்கலம் சாலை மீடியனில் சுற்றித்திரியும் மாடுகளால் பீதி
மணிமங்கலம் சாலை மீடியனில் சுற்றித்திரியும் மாடுகளால் பீதி
ADDED : ஜன 10, 2025 02:22 AM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையை 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, தாம்பரம் -- முடிச்சூர் சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. ஸ்ரீபெரும் புதுார் அடுத்த கொளத்துார், நாவலுார் பகுதிகளில், ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலை மீடியனில் உள்ள புற்களை உண்பதற்காக, தினமும் ஏராளமானமாடுகள் வருகின்றன.
திடீரென சாலையின் குறுக்கே செல்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதுடன், மீடியனில் உள்ள செடிகளை பாதுகாக்க, வேலி அமைத்து பராமரிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.