/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர பள்ளத்தால் அச்சம் இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
/
சாலையோர பள்ளத்தால் அச்சம் இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
சாலையோர பள்ளத்தால் அச்சம் இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
சாலையோர பள்ளத்தால் அச்சம் இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 27, 2025 11:41 PM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம் எடமச்சி கிராமத்தில், சாலவாக்கம் -- திருமுக்கூடல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை சுற்றுவட்டார கிராமத்தினர் பயன்படுத்தி, வாலாஜாபாத், செங்கல்பட்டு, சாலவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
எடமச்சி கிராமத்தில் உள்ள சாலையோரங்களில், விபத்து ஏற்படுவதை தடுக்க மண் கொட்டப்பட்டு இருந்தது. 'பெஞ்சல்' புயலால் ஏற்பட்ட மழையின்போது, சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக, சாலையோர பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து, அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதை தடுக்க சாலையோரத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்க, வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும், தற்போது வரை இரும்பு தடுப்புகள் அமைக்கப்படவில்லை. எனவே, சாலையோர பள்ளத்தால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, இரும்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.