நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம், செவிலிமேடு மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர்பார்த்திபன், 37; இவரது மனைவி சித்ரா, 33; இவர்களுக்கு இரு குழந்தைகள்.
இருவருக்கும் இடையே பல நாட்களாகவே, குடும்ப பிரச்னை நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி, சித்ரா தன் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது, அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, சித்ரா நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காஞ்சி தாலுகா போலீசார், விசாரிக்கின்றனர்.

