/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மளிகை கடையில் தீ விபத்து ரூ.7 லட்சம் பொருட்கள் நாசம்
/
மளிகை கடையில் தீ விபத்து ரூ.7 லட்சம் பொருட்கள் நாசம்
மளிகை கடையில் தீ விபத்து ரூ.7 லட்சம் பொருட்கள் நாசம்
மளிகை கடையில் தீ விபத்து ரூ.7 லட்சம் பொருட்கள் நாசம்
ADDED : ஏப் 25, 2025 01:31 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், 50. சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, லோகநாதன் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4:30 மணியளவில் மளிகை கடையில் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. இதை கண்ட அக்கம் பக்கம் பக்கத்தினர், லோகநாதன் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த, ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு துறை வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், கடையில் இருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.இது குறித்த புகாரின்படி, சுங்குவார்சத்திரம் விசாரித்து வருகின்றனர்.