/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பென்னலுார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
/
பென்னலுார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
ADDED : ஜன 30, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பென்னலுார் கிராமத்தில், பழங்குடியினத்தவர்களின் குடியிருப்பு நடுவே, அதே பகுதியைச் சேர்ந்த முருகன், பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் குடோன் வைத்துள்ளார்.
நேற்று மாலை 3:00 மணி அளவில், பிளாஸ்டிக் கழிவு குடோன் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. இதனால், அருகே உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தகவலறிந்த, ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர்.
இதை தொடர்ந்து, குடியிருப்புகள் அருகே பிளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவு குடோன்கள் அமைப்பதை தவிர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் தெரிவித்தனர்.

