/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்திற்கு ‛ரெட் அலெர்ட் எதிரொலி தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்
/
காஞ்சிபுரத்திற்கு ‛ரெட் அலெர்ட் எதிரொலி தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்
காஞ்சிபுரத்திற்கு ‛ரெட் அலெர்ட் எதிரொலி தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்
காஞ்சிபுரத்திற்கு ‛ரெட் அலெர்ட் எதிரொலி தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்
ADDED : நவ 30, 2024 12:50 AM

காஞ்சிபுரம்:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களுக்கு, இன்று, ‛ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
இம்மாவட்டங்களில் 21 செ.மீ., க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கன மழையை எதிர்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள், மீட்பு உபகரணங்களுடன் 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அதிக கன மழையை எதிர்கொள்ளும் வகையில், மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுகோட்டை, உத்திரமேரூர், ஒரகடம் ஆகிய ஐந்து தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் அனைவரும் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மோட்டார் பொருத்திய ரப்பர் படகுகள், சாலையில் விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பல்வேறு மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.