ADDED : நவ 23, 2024 08:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோவிலி ஸ்ரீதர்ம சாஸ்தா பஜனை சபா அறக்கட்டளை சார்பில், அய்யப்பனுக்கு 50வது ஆண்டு மலர் பூஜை நடந்தது. இதில், கோவலில் தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் தர்ம சாஸ்தாவிற்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது.
சபா அறக்கட்டளை தலைவர் கோவர்தனன் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இரவு, அய்யப்பனுக்கு சிறப்பு மலர் பூஜையும், மஹா தீபாராதனையும் நடந்தது.