/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பனி பொழிவால் பூ விளைச்சல் குறைவு
/
பனி பொழிவால் பூ விளைச்சல் குறைவு
ADDED : நவ 22, 2025 01:16 AM

காஞ்சிபுரம்: பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால், காஞ்சிபுரத்தில் மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மல்லிகை, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இப்பகுதியில், பனிப்பொழிவு நிலவி வருவதால், பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, காஞ்சிபுரத்திற்கு பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் நேற்று பல்வேறு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து இருந்தது.
அதன்படி, கடந்த மாதம் கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ நேற்று, 1,500 ரூபாய்க்கும், 250ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லை, 1,000 ரூபாய்க்கும், 800க்கு விற்கப்பட்ட கனகாம்பரம், 1,500 ரூபாய்க்கும், 25 0க்கு விற்கப்பட்ட ஜாதிமல்லி 800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

