sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேர்தலுக்கு பறக்கும் படை, கண்காணிக்க 80 குழுக்கள்...தயார்!:115 மண்டல அதிகாரிகள் நியமித்து கலெக்டர் உத்தரவு

/

தேர்தலுக்கு பறக்கும் படை, கண்காணிக்க 80 குழுக்கள்...தயார்!:115 மண்டல அதிகாரிகள் நியமித்து கலெக்டர் உத்தரவு

தேர்தலுக்கு பறக்கும் படை, கண்காணிக்க 80 குழுக்கள்...தயார்!:115 மண்டல அதிகாரிகள் நியமித்து கலெக்டர் உத்தரவு

தேர்தலுக்கு பறக்கும் படை, கண்காணிக்க 80 குழுக்கள்...தயார்!:115 மண்டல அதிகாரிகள் நியமித்து கலெக்டர் உத்தரவு


ADDED : மார் 08, 2024 11:50 PM

Google News

ADDED : மார் 08, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலை கண்காணிக்க, பறக்கும் படை என, 80 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், 16 நோடல் அதிகாரிகள், 115 மண்டல அதிகாரிகள் ஆகியோரை நியமித்து கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே, காஞ்சிபுரம் மாவட்டம் தேர்தலுக்கு தயாராகியுள்ளது.

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

1,398 ஓட்டுச்சாவடிகள்


லோக்சபா தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக, இவர் செயல்பட்டாலும், மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலராக உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான பல்வேறு பணிகள் சில மாதங்களாகவே தீவிரமாக நடந்தன. அதில், முதற்கட்டமாக கடந்தாண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள 1,398 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான, 6,005 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 2,693 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,141 'விவிபேட்' எனும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களும் சரி பார்க்கப்பட்டு தயாராக கையிருப்பில் உள்ளன.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவது, தேர்தல் செலவின கணக்குகள் பார்ப்பது, விழிப்புணர்வு, தேர்தல் ஊழியர்களை நியமிப்பது, தேர்தல் பயிற்சி கொடுப்பது என, தேர்தல் பணிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது துணை கலெக்டர் நிலையில், 16 நோடல் அதிகாரிகள் நியமித்து ஏற்கனவே கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தேர்தல்ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க 115 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் போன்றவை வழங்குவதை தடுக்கவும், உரிய ஆவணம் இன்றி பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க, நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.

அவ்வாறு, காஞ்சிபுரம்மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும், தலா 3 குழுக்கள், மூன்று ஷிப்டுகளில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில், நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு நாளைக்கு 36 குழுக்கள், 36 இடங்களில் நின்று கொண்டு வாகன தணிக்கை செய்யும்.

தேர்தல் விதிமீறல்களை தடுக்கவும் பறக்கும் படையினரை நியமித்து கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுவும், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஒரு நாளைக்கு 9 குழுவாக மூன்று ஷிப்டுகளில் பணியாற்றும். மொத்தம், 36 குழுவினர்அமைக்கப்பட்டுள்ளனர்.இரு குழுவிலும், 72 குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவில், ஒரு அதிகாரி, இரு போலீஸ், ஒரு கேமரா மேன், ஒரு வாகன ஓட்டுனர் ஆகிய ஐந்து பேர் இடம் பெற்றிருப்பர்.

மேலும், வீடியோ குழு என, ஒரு சட்டசபை தொகுதிக்கு இரு குழு என, நான்கு சட்டசபை தொகுதிக்கு, எட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு பயிற்சி


மாவட்டம் முழுதும், பறக்கும் படை, கண்கண்காணிப்பு குழு என, 80 குழுக்கள் நியமித்து, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

இதன் வாயிலாக, தேர்தலுக்கான பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது.

இதையடுத்து, ஓட்டுச்சாவடியில் பணியாற்ற உள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், 7,000 அரசு ஊழியர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு பெரும்பாலான பணிகள் முடிந்து, மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16 நோடல் அதிகாரிகளுக்கான பணிகள் விபரம்


1. தேர்தல் பணியாளர்களை மேலாண்மை செய்வது
2. தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குவது
3. தேர்தல் பொருட்களை பாதுகாத்தல், வழங்குவது
4. வாகன போக்குவரத்து வசதி செய்து தருதல்
5. கணினி பயன்பாடு, இணைய வசதி அமைத்தல்
6. தேர்தல் விழிப்புணர்வு செய்தல்
7. சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு
8. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மேலாண்மை செய்வது
9. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவது
10. தேர்தல் செலவின பார்வை
11. தபால் ஓட்டு, தேர்தல் ஓட்டுச்சீட்டு தயார் செய்வது
12. பத்திரிகை, டிவி செய்திகளை கண்காணிப்பது
13. தகவல் தொடர்பு திட்டமிடுதல்
14. வாக்காளர் விபரங்களை அச்சிடுதல், தயாரித்தல்
15. தேர்தல் புகார்களை பதிவிடுவது
16. தேர்தல் பார்வையாளர்களுடன் ஒருங்கிணைந்து பணி ஆற்றுதல்.








      Dinamalar
      Follow us