/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம்: 1,000 பேருக்கு அன்னதானம்
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம்: 1,000 பேருக்கு அன்னதானம்
எம்.ஜி.ஆர்., நினைவு தினம்: 1,000 பேருக்கு அன்னதானம்
எம்.ஜி.ஆர்., நினைவு தினம்: 1,000 பேருக்கு அன்னதானம்
UPDATED : டிச 25, 2025 08:05 AM
ADDED : டிச 25, 2025 05:59 AM

காஞ்சிபுரம்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 38வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, 1,000 பேருக்கு அன்னதானம் நேற்று வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் காந்தி ரோடு ஆர்.வீ.ஆர்., ரியல் எஸ்டேட் அலுவலகம் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 38வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கோபால், வஜ்ஜிரவேலு, காமாட்சிகான் உட்பட பலர் பங்கேற்றனர்.