/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தக கண்காட்சியில் பங்கேற்றவர்களுக்கு வல்லக்கோட்டை முருகன் கோவில் பிரசாதம்
/
புத்தக கண்காட்சியில் பங்கேற்றவர்களுக்கு வல்லக்கோட்டை முருகன் கோவில் பிரசாதம்
புத்தக கண்காட்சியில் பங்கேற்றவர்களுக்கு வல்லக்கோட்டை முருகன் கோவில் பிரசாதம்
புத்தக கண்காட்சியில் பங்கேற்றவர்களுக்கு வல்லக்கோட்டை முருகன் கோவில் பிரசாதம்
ADDED : டிச 25, 2025 06:00 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புத்தக கண்காட்சியை பார்வையிட வந்த பார்வையாளர்களுக்கு நேற்று வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 4வது புத்தக கண்காட்சி கடந்த 19ம் தேதி துவங்கியது.
இங்கு பல்வேறு பதிப்பகங்கள் மூலம், ஆன்மிகம், மருத்துவம், கல்வி, சிறுகதை, நாவல், ஆங்கில மொழி என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட, 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 10:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை புத்தக கண்காட்சி நடந்து வருகிறது.
புத்தக கண்காட்சியில் ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், தினமும் ஒவ்வொரு கோவிலின் பிரசாதம் சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்பட்டு, கண்காட்சியை பார்வையிட வருவோருக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆறாவது நாளான நேற்று, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்பட்ட புளியோதரை, பைனாப்பிள் கேசரி பிரசாதம் புத்தக கண்காட்சி அரங்கிற்கு கொண்டு வரப்பட்டு கண்காட்சியை பார்வையிட வந்த பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில், வல்லக்கோட்டை முருகன் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், வணிக வரித் துறை துணை ஆணையர் சந்திரசேகர், மண்டல தணிக்கை அலுவலர் நாகரத்தினம் உள்ளிட்டோர் வல்லக்கோட்டை முருகன்தல வரலாறு, விபூதி, குங்கும பிரசாதம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை எழுத்தர் நித்யகலா, ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

