/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் பழச்சாறு கடைகளில் தரமற்ற பழங்கள் பயன்பாடு உணவு பாதுகாப்பு துறை ஆய்வு அவசியம்

ADDED : மார் 15, 2025 09:14 PM
காஞ்சிபுரம்:கோடை காலம் துவங்கிய நிலையில், பலரும் பழச்சாறு ஆர்வத்துடன் கடைகளில் வாங்கி குடிக்கின்றனர். அவ்வாறு, காஞ்சிபுரம் நகர கடைகளில் வாங்கும் பழச்சாறுக்கு பயன்படுத்தும் பழங்கள் தரமானதாக இருப்பதில்லை என, வாடிக்கையாளர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
கோடை காலத்தில் பழச்சாறு அதிகளவில் வியாபாரம் ஆவதால், கடைகள் மட்டுமல்லாமல், தள்ளுவண்டி கடைகளில் கூட, திடீரென பலர் பழச்சாறு கடை நடத்துகின்றனர்.
அவ்வாறு விற்பனை செய்யப்படும் பழச்சாறுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கgfகூடிய, அழுகgfகூடிய நிலையில் உள்ள பழங்களை பயன்படுத்துவதாக பலரும் புகார் தெரிவிக்கின்றனர். தரமற்ற பழங்களை பயன்படுத்தி அருந்தும் பழச்சாறால், வயிறு உபாதை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் நகரில் ஏராளமான பழச்சாறு கடைகள் உள்ளன. இக்கடைகளில், உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த வேண்டும். உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து, தரமற்ற பழங்களை பயன்படுத்தும் கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து, அபராதம் விதிக்க வேண்டும் என நகரவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.