/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையத்திற்கு அடிக்கல்
/
வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையத்திற்கு அடிக்கல்
வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையத்திற்கு அடிக்கல்
வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையத்திற்கு அடிக்கல்
ADDED : டிச 12, 2024 10:15 PM
வாலாஜாபாத்,:காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு சாலையின் மையப்பகுதியில், வாலாஜாபாத் உள்ளது.
இங்குள்ள வட்டார அரசு பொதுமருத்துவமனையில், தினமும் 500 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். 60 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையில், தினசரி 20 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைகக்கு போதுமான மருத்துவ வசதி இல்லை. இதனால், அம்மாதிரியான பாதிப்புகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசுபொதுமருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
இவற்றை தடுக்க வாலாஜாபாத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு ஏற்படுத்த பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
அக்கோரிக்கையை ஏற்று, சுகாதார அமைப்பு சீர்த்திருத்த திட்டத்தின் கீழ், வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான வார்டுகள் புதியதாக கட்ட 4.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் அடிக்கல் நாட்டினார்.
மருத்துவ இணை இயக்குனர் நளினி, வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன்,
துணை தலைவர் சேகர், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

