sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வினியோகம்

/

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வினியோகம்

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வினியோகம்

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வினியோகம்


ADDED : மே 29, 2025 12:21 AM

Google News

ADDED : மே 29, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை வாயிலாக, 'வேளான் வனவியல்' திட்டத்தின் கீழ் விவசாயிகள், பயிர் சாகுபடியுடன் அதிக லாபம் தரும் மர வகை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

இதில், தேக்கு, மகாகனி, வேங்கை, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை வரப்பு பயிராக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு, 65 மரக்கன்றுகளும், தோப்பாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு,- 200 மரக்கன்று வீதம் மொத்தம், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 50,000 மரக்கன்றுகள், எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மரக்கன்று தேவைப்படும் விவசாயிகள், அந்தந்த வட்டார தோட்டக்கலை அலுவலகம் மற்றும் அரசு தோட்டக்கலை பண்ணைகள் விச்சந்தாங்கல், பிச்சிவாக்கம் பண்ணையை அணுகி பயன்பெறுமாறு தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபரங்களுக்கு, உத்திரமேரூர் வட்டாரத்திற்கு தணிகைவேல்- 95667 72629, நவீன் 99943 47012; வாலாஜாபாதிற்கு பிரித்விராஜ் 86755 14523, -94439 61378; ஸ்ரீபெரும்புதுாருக்கு- மோகன் - 95003 64184, ராம்குமார் -99402 47961; படப்பைக்கு- சுகுமார் 88071 71746, ஹரி 96299 64148.

காஞ்சிபுரத்திற்கு சதாசிவம் 78269 87255, பாலகிருஷ்ணன் 96988 32023 ஆகிய உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us