தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றிலும் கொட்டப்படும் குப்பை கழிவுகள் பக்தர்கள் முகம்சுளிப்பு

ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றிலும் கொட்டப்படும் குப்பை கழிவுகள் பக்தர்கள் முகம்சுளிப்பு

ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றிலும் கொட்டப்படும் குப்பை கழிவுகள் பக்தர்கள் முகம்சுளிப்பு


ADDED : செப் 25, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றிலும் குப்பை கழிவுகள் கொட்டப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம்சுளிக்கின்றனர்.

காஞ்சிபுரம் நகரின் முக்கிய ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக ஏகாம்பரநாதர் கோவில் விளங்குகிறது. தினமும் உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் வகையில், ‘ஹெரிடேஜ்’ திட்டத்தின் கீழ் சாலைகள், நடைபாதைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், அந்த கட்டமைப்புகள் உடைந்து வீணாகியுள்ளன. இதனால், கோவில் சுற்றுப்புறம் மோசமான நிலையில் உள்ளது. தற்போது, கோவில் சுற்றுப்புறத்தின் பல இடங்களில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, டி.எஸ்.பி., அலுவலகம் அருகே, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளிலேயே குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம்சுளிக்கின்றனர். சில இடங்களில் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் தேங்குவதால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படும் அபாயம் உள்ளது.

கோவில் சுற்றுப்புறத்தை அழகுபடுத்துவதற்காக, பல்வேறு திட்டங்களின் கீழ் செலவிடப்பட்ட நிதியில் செய்யப்பட்ட பணிகளும், முறையான பராமரிப்பு இல்லாததால், பயனின்றி வீணாகி வருகின்றன.

எனவே, கோவில் சுற்றுப்புறத்தில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுத்து, தொடர்ந்து கண்காணிக்க, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us