/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராமானுஜர் கோவில் அருகே குப்பை பக்தர்கள் முகம் சுளிப்பு
/
ராமானுஜர் கோவில் அருகே குப்பை பக்தர்கள் முகம் சுளிப்பு
ராமானுஜர் கோவில் அருகே குப்பை பக்தர்கள் முகம் சுளிப்பு
ராமானுஜர் கோவில் அருகே குப்பை பக்தர்கள் முகம் சுளிப்பு
ADDED : ஜன 03, 2025 02:04 AM

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது.
வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமாக விளங்கும் இக்கோவிலில், ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், ஸ்ரீபெரும்புதுார் வந்து ராமானுஜரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில், ராமானுஜர் கோவிலுக்கு செல்லும் நுழைவாயில் எதிரே, இலை, பூக் கழிவு, உணவு கழிவு, பாலிதீன் கவர் குப்பை கொட்டப்பட்டள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிப்புடன் செல்கின்றனர்.
தவிர, வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுவதோடு, பல நாட்களாக குப்பை அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி துாய்மை பணியாளர்கள், நாள்தோறும் குப்பையை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.