/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் குப்பை குவியல் கோவில் அருகே சுகாதார சீர்கேடு
/
சாலையோரம் குப்பை குவியல் கோவில் அருகே சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை குவியல் கோவில் அருகே சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை குவியல் கோவில் அருகே சுகாதார சீர்கேடு
ADDED : ஜன 07, 2025 11:51 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வெள்ளகுளம் தெருவில், சந்தவெளியம்மன் கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தெரு வழியாக சர்வதீர்த்தகுளம், பாக்குபேட்டை, புத்தேரி, கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
பக்தர்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த கோவில் அருகே கொட்டப்படும் குப்பையை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றுவதில்லை. இதனால், சாலையோரம் குப்பை குவியலாக உள்ளது.
இதனால், சந்தவெளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி, அவ்வழியாக செல்லும் பாதசாரிகளும் முகம்சுளித்தபடியே செல்கின்றனர். காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, கோவில் அருகே உள்ள குப்பை கழிவுகளை அகற்றுவதோடு, அப்பகுதியில் குப்பை கொட்ட மாநகராட்சி நிர்வாகம் தடைவிதிக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.