/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பஞ்சுபேட்டையில் குப்பை குவியல் நோய் தொற்று பரவும் சூழல்
/
பஞ்சுபேட்டையில் குப்பை குவியல் நோய் தொற்று பரவும் சூழல்
பஞ்சுபேட்டையில் குப்பை குவியல் நோய் தொற்று பரவும் சூழல்
பஞ்சுபேட்டையில் குப்பை குவியல் நோய் தொற்று பரவும் சூழல்
ADDED : ஏப் 22, 2025 12:25 AM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெருவில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பஞ்சுபேட்டை சுற்றியுள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சுகாதார நிலையம் எதிரில் அப்குதியினர் கொட்டும் குப்பையை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றாமல் உள்ளனர்.
குப்பையில் உள்ள கெட்டுப்போன உணவு, மீன், இறைச்சி கழிவால் துர்நாற்றம் வீசுகிறது. காற்றில் பறக்கும் குப்பையால், சுகாதார நிலையத்திற்கு வருவோருக்கு நோய் தொற்று பரவும் சூழல் உள்ளது.
எனவே, சுகாதார நிலையம் எதிரில் குவியலாக உள்ள குப்பையை அகற்றவும், அப்பகுதியில் மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.