/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிக்கரையில் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
/
ஏரிக்கரையில் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
ஏரிக்கரையில் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
ஏரிக்கரையில் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 30, 2025 01:30 AM

கா ஞ்சிபுரம் அல்லாபாத் ஏரியில், மாநகராட்சி மற்றும் எக்ஸ்னோரா தன்னார்வ அமைப்பு சார்பில், துார்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏரியை சுற்றியுள்ள பகுதியில் துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்க செல்வதில்லை. இதனால், அப்பகுதி மக்கள், ஏரிக்கரையை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஏரிக்கரை குப்பை மேடாக உள்ளது.
நாள் கணக்கில் தேங்கியுள்ள குப்பையை மாநகராட்சி நிர்வாகம் அகற்றாததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், ஏரிக்கரையை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அல்லாபாத் ஏரிக்கரையில் உள்ள குப்பையை அகற்றுவதோடு, அப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கவும், தினமும் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.கேசவன், காஞ்சிபுரம்.