sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசை

/

வரதராஜ பெருமாள் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசை

வரதராஜ பெருமாள் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசை

வரதராஜ பெருமாள் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசை


ADDED : ஏப் 16, 2025 01:21 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவத்தை அடுத்து வரும் நாளில், வேகவதி தெருவில் அமைந்துள்ள தோட்டத்தில், பெருமாள், உபய நாச்சியாருடன் எழுந்தருளி தோட்ட உத்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நேற்று காலை 5:30 மணிக்கு வரதராஜ பெருமாள், உபய நாச்சியாருடன், வெங்கடாத்ரி கொண்டை அலங்காரத்தில் தங்க பல்லக்கில், சேனை முதன்மையாருடன் சன்னிதி தெரு, நான்கு மாட வீதிகள் வழியாக வேகவதி தெருவில் அமைந்துள்ள தோட்டத்திற்கு சென்றடைந்தார்.

அங்கு காலை 11:00 மணியளவில் சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் விசேஷ பூஜை நடந்தது. தொடந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணியளவில், வரதராஜ பெருமாள், உபயநாச்சியார் பன்னீர் ரோஜா மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பத்தி உலாத்தல் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us