/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிற்சி
/
பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிற்சி
ADDED : டிச 12, 2024 10:33 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வேளாண் அறிவியல் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள், வேளாண் தொழிற்கல்வி ஆசிரியர் சவுந்தர்ராஜன் தலைமையில், பண்ணை சுற்றுலா திட்டத்தின் வாயிலாக, விச்சந்தாங்கல் அரசு தோட்டக்கலை பண்ணைக்கு வந்தனர். கடந்த 10 நாட்களாக மாணவர்களுக்கு தோட்டக்கலை சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பண்ணையில், தோட்டக்கலை அலுவலர் சே.சவுமியா, உதவி தோட்டக்கலை அலுவலர் மு.தனஞ்ஜெயன் ஆகியோர், நவீன தொழில்நுட்பத்தில் எவ்வாறு செடிகள் வளர்ப்பது, பதியன் போடுதல், மண்புழு உரம், மண் கலவை தயாரித்தல், களை எடுத்தல், மருந்துதெளிப்பான்கள் பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளித்தனர்.
நிறைவு விழாவில், தலைமை ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

