/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் கருடசேவை
/
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் கருடசேவை
ADDED : ஏப் 13, 2025 01:34 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் புஷ்பவல்லி தாயார் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும். உத்சவத்தையொட்டி தினமும், காலை 6:00 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும் அஷ்டபுஜ பெருமாள் பல்வேறு வாகனத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம், இன்று காலை 5:00- - - 600 மணிக்குள் துவங்குகிறது. தொடர்ந்து திருமஞ்சனம் நடக்கிறது. மாலை சிம்ம வாகன உத்சவம் நடக்கிறது. இரண்டாம் நாள் உத்சவமான நாளை காலை ஹம்ச வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும் சுவாமி வீதியுலா வருகிறார்.
இதில், மூன்றாம் நாள் உத்சவமான நாளை மறுநாள், காலை கருடசேவை உத்சவமும், மாலை ஹனுமந்த வாகனத்திலும் வீதியுலா பெருமாள் வீதியுலா வருகிறார்.
நான்காம் நாள் உத்சவமான வரும் 16ம் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை சந்திர பிரபையிலும், ஐந்தாம் நாள் உத்சவமான 17 ம் தேதி காலை நாச்சியார் திருக்கோலத்திலும், மாலை யாளி வாகனத்திலும் உலா வருகிறார்.
ஆறாம் உத்சவமான 18ம் தேதி காலை வேணுகோபாலன் திருக்கோலத்திலும், மாலை யானை வாகனத்திலும் பெருமாள் வீதியுலா வருகிறார்.
ஏழாம் நாள் உத்சவமான வரும் 19ல் காலை தேரோட்டமும், மாலை திருமஞ்சனமும் விமரிசையாக நடைபெறுகிறது. எட்டாம் நாள் உத்சவமான 20ம் தேதி காலை திருப்பாதம் ஜாதி திருமஞ்சனமும், மாலை குதிரை வாகனமும், ஒன்பதாம் நாள் உத்சவமான 21ம் தேதி காலை ஆள்மேல் பல்லக்கும், மாலை, சக்ரகோட்டி விமான உத்சவமும் நடக்கிறது. உத்சவம் நிறைவு நாளான வரும் 22ம் தேதி காலை த்வாதச ஆராதனமும், மாலை வெட்டிவேர் சப்பரத்துடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.
உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்காலர்கள் இளங்கோவன், தேவிகா, கோவில் அர்ச்சகர்கள், அர்ச்சகர்கள் முரளிபட்டர் கமலகண்ணன், உபயதாரர்கள் உள்ளிட்டோர் இணைந்து செய்து வருகின்றனர்.