/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதர் கோவிலில் வரும் 9ல் கருடன் உத்சவம்
/
வரதர் கோவிலில் வரும் 9ல் கருடன் உத்சவம்
ADDED : ஆக 03, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், இந்தாண்டிற்கான ஆடி மாத கருடன் உத்சவம் வரும் 9ம் தேதி நடக்கிறது.
கருட உத்சவத்தையொட்டி, அன்று மாலை 5:00 மணிக்கு வாகன மண்டபத்திற்கு பெருமாள் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு விசேஷ மலர் அலங்காரம் நடைபெற உள்ளது.
மாலை 6:00 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து, கருடவாகனத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு கஜேந்திர மோட்ஷம் நடக்கிறது. தொடர்ந்து ஆழ்வார் பிரகாரமாக வலம் வந்து, திருவடிகோவில் வழியாக மாட வீதி புறப்பாடு நடக்கிறது.