/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லாரி மோதியதில் சாய்ந்த ராட்சத வழிகாட்டி பலகை
/
லாரி மோதியதில் சாய்ந்த ராட்சத வழிகாட்டி பலகை
ADDED : நவ 05, 2025 02:08 AM

உத்திரமேரூர்: -வெங்கச்சேரியில், லாரி மோதியதில் சாய்ந்து கிடக்கும் ராட்சத வழிகாட்டி பலகையை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் நெடுஞ்சாலை, வெங்கச்சேரி கிராமத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட, ராட்சத வாகன வழிகாட்டி பலகை உள்ளது.
இச்சாலை வழியே செல்லும் வாகனங்கள், இந்த வாகன வழிகாட்டி பலகையை பயன்படுத்தி தினமும் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.
இந்த வாகன வழிகாட்டி பலகையின் அருகே, இரவு நேரங்களில் லாரிகள் நிறுத்தப்பட்டுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை 6:00 மணியளவில், இங்கே நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் டிரக்கை மேலே துாக்கும்போது, எதிர்பாராத விதமாக, மேலே இருந்த வாகன வழிகாட்டி பலகை மீது மோதியது.
இதில், வாகன வழிகாட்டி பலகையின் கான்கிரீட் அடித்தளம் பெயர்ந்து சாய்ந்த நிலையில் உள்ளது. அவ்வாறு சாய்ந்து கிடக்கும் வாகன வழிகாட்டி பலகை, அவ்வழியே செல்லும் வாகனங்கள் மீது எந்நேரத்திலும் விழுந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, வெங்கச்சேரியில் சாய்ந்து கிடக்கும் ராட்சத வாகன வழிகாட்டி பலகையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

