/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு
/
மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு
ADDED : அக் 14, 2025 10:42 PM
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் ஏ.கே.டி., தெருவைச் சேர்ந்த சக்திவேல் - சரண்யா தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில், ஏழு வயதுடைய இரண்டாவது பெண் குழந்தை கார்த்திகாவிற்கு, சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலை கார்த்திகாவிற்கு காய்ச்சல் தன்மை அதிகரித்துள்ளது. ஏனாத்துார் தனியார் மருத்துவமனையில், கார்த்திகாவை சேர்த்தனர். பின் தீவிர சிகிச்சைக்கு, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
மர்ம காய்ச்சலால், சிறுமி இறப்பு குறித்து, காஞ்சிபுரம் நகரில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இறந்த சிறுமிக்கு அதிக வலிப்பு வந்ததால், முளைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவரின் மருத்துவ அறிக்கை, மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளோம்' என்றார்.