/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நண்பரை கொன்ற வாலிபருக்கு 'ஆயுள்'
/
நண்பரை கொன்ற வாலிபருக்கு 'ஆயுள்'
ADDED : அக் 14, 2025 10:42 PM
காஞ்சிபுரம்,:நண்பரை கொலை செய்த வாலிபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த ருத்ரன், 30, மணிகண்டன், 31, உட்பட சிலர், சினிமாவில் வேலை வாய்ப்பு தேடி, சென்னை அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம் குடியிருப்பில் தங்கி வந்தனர். 2021 ஜன., 1ல் ஆங்கில புத்தாண்டு தினத்தில், மணிகண்டன், ருத்ரன் இருவரும், மது போதையில் இருந்தபோது, வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. ஆத்திரமடைந்த மணிகண்டன், ருத்ரனை கத்தியால் குத்தி உள்ளார். இதில், ருத்ரன் சம்பவ இடத்திலேயே, உயிரிழந்தார்.
மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், வழக்கு நடந்து வந்தது. அரசு தரப்பில், கூடுதல் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி வாதாடினார்.
நேற்று, காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோகனகுமாரி, மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.