ADDED : அக் 14, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அருகே, பள்ளமொளச்சூர் கிராமத்தில் உள்ள மளிகை கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, பள்ளமொளச்சூர் கிராமத்தில் உள்ள மளிகை கடை ஒன்றில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, 10,000 ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ குட்கா பொருட்ளை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளர் பிரபு, 38, மற்றும் துரைசெல்வன், 27, ஆகிய இருவரை கைது செய்தனர்.