/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலி கொலை * கைதான காதலன் வாக்குமூலம்
/
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலி கொலை * கைதான காதலன் வாக்குமூலம்
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலி கொலை * கைதான காதலன் வாக்குமூலம்
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலி கொலை * கைதான காதலன் வாக்குமூலம்
ADDED : ஏப் 04, 2025 01:25 AM

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், கொளத்துாரைச் சேர்ந்தவர் புஷ்பா, 65. இவரது மகள் விக்னேஷ்வரி, 24. தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இவர், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த தீபன், 27, என்பவரை, காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதித்த நிலையில், இன்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி, தாயுடன் தகராறு செய்து வெளியேறிய விக்னேஷ்வரி வீடு திரும்பவில்லை. கொளத்துார் மயானம் அருகே, தலையில் பலத்த காயத்துடன், நேற்றுமுன்தினம் இறந்து கிடந்தார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். காதலன் தீபக் தலைமறைவாக இருந்தார். மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்த நிலையில் இருந்தது.
புதுக்கோட்டை சுங்கச்சாவடி அருகே, பேருந்தில் சென்று கொண்டிருந்த தீபனை, போலீசார் கைது செய்தனர். தீபன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:
தாயுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய விக்னேஷ்வரி, என்னை அழைத்தார். கொளத்துார் மயானம் அருகே சென்று இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.
உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, அவர் நச்சரித்தார். இதனால், எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்து, விக்னேஷ்வரியின் தலையில் கல்லை துாக்கி போட்டு கொலை செய்தேன்.
இவ்வாறு தீபன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

