/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு வரும் 16ல் தங்க தாடங்கம் பிரதிஷ்டை

ADDED : பிப் 12, 2025 08:16 PM
காஞ்சிபுரம்:திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாத சுவாமி கோவில் மூலவர் அகிலாண்டேஸ்வரிக்கு, வரும் 16ம் தேதி காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், காதணி எனப்படும் தங்க தாடங்கத்தை பிரதிஷ்டை செய்ய உள்ளார்.
காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது:
திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேசுவரத்தில், அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமையும், பல்வேறு வரலாற்று சிறப்புகளையும் உடைய இக்கோவிலில், மூலவர் அகிலாண்டேஸ்வரிக்கு, வரும் 16ம் தேதி காதணி எனப்படும் தங்க தாடங்கம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இக்கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர், புதிதாக தாடங்கம் செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், வரும் 16ம் தேதி காலை 11:45 மணிக்கு தங்க தாடங்கத்தை அம்மனுக்கு பிரதிஷ்டை செய்யவுள்ளார்.
இதையொட்டி, அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. இந்நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.