/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவிந்தவாடியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி
/
கோவிந்தவாடியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி
ADDED : ஜன 16, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோமாரி தடுப்பூசி முகாம், ஜன.,3ல் சிறுவாக்கம் கிராமத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.
கோவிந்தவாடி குறு வட்டத்தைச் சேர்ந்த கம்மவார்பாளையம் கால்நடை மருத்துமனையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிந்தவாடி, படுநெல்லி, கம்மவார்பாளையம் ஆகிய கிராமங்களில், கால்நடை மருத்துவர் லட்சுமிபதி தலைமையில், கால்நடை துறையினர் கோமாரி தடுப்பூசி செலுத்தினர்.

