ADDED : பிப் 15, 2025 07:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வரதன், 70. இவர், வாலாஜாபாத் ராஜவீதியில் கடை வைத்து வியாபாரம் செய்யும் பழனி 68, என்பவரது கடையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை வியாபாரம் தொடர்பாக பழனி, வரதன் ஆகிய இருவரும், இருசக்கர வாகனத்தில் ஒரகடம் சென்றனர்.
சேர்க்காடு அருகே சென்றபோது, சென்னையில் இருந்து, வாலாஜாபாத் மார்க்கமாக வந்துக்கொண்டிருந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், வரதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

