ADDED : பிப் 08, 2024 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டலம்:நெமிலி- - -பூந்தமல்லி இடையே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், நெமிலியில் இருந்து, பூந்தமல்லிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
இதையடுத்து, நெமிலி- மண்ணுார்- தண்டலம் வழியாக பூந்தமல்லிக்கு, தடம் எண்:64ஏ, எனும் புதிய வழித்தடத்தில் நேற்று அரசு பேருந்து இயக்கப்பட்டது.
நெமிலி கிராமத்தில் நடந்த துவக்க விழாவில், ஸ்ரீபெரும்புதுார் காங்., -எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை பங்கேற்று கொடியசைத்து பேருந்தை துவக்கி வைத்தார்.

