நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, குண்ணவாக்கம் கிராமத்தில் உள்ளது காட்டாங்குளம் துணை கிராமம். இங்கு, அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து, தனி நபர் ஒருவர் வாழை, தென்னை கன்றுகள் நட்டு, வைக்கோல் போர்வை அமைத்து இருந்தார்.
இதை, உத்திரமேரூர் தாசில்தார் தேன்மொழி நேற்று முன்தினம், ஜேசிபி வாயிலாக அகற்றி, அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டார். வருவாய் ஆய்வாளர் சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.