/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த பார்வையற்றோருக்கான 'ஆடியோ புக்'
/
அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த பார்வையற்றோருக்கான 'ஆடியோ புக்'
அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த பார்வையற்றோருக்கான 'ஆடியோ புக்'
அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த பார்வையற்றோருக்கான 'ஆடியோ புக்'
ADDED : ஜன 07, 2025 07:43 AM

காஞ்சிபுரம் :   காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நேற்று காலை 11:00 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில், வேலைவாய்ப்பு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், பட்டா மாற்றம், உதவித்தொகை, பட்டா திருத்தம் என, பலவகையான கோரிக்கை தொடர்பாக, 351 பேர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் இணைந்து போட்டி நடத்தியது.
இதில், பார்வையற்றோருக்கான ஆடியோ புத்தகத்தை வடிவமைத்து, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த, கோவிந்தவாடி அரசு பள்ளி மாணவர்களை, கலெக்டர் கலைச்செல்வி வாழ்த்தினார்.
மாணவர்களுக்கு 10,000 ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
இதை தொடர்ந்து, 2023 - 24ல், சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த சங்க செயலர்கள், பால் குளிர்விப்பான் மைய பொறுப்பாளர்கள் ஆகியோருக்கு, முதல் பரிசாக 10,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 5,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 3,000 ரூபாயும், பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
அதேபோல், நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு பரிசுத்தொகையும், தாட்கோ மூலம் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டையும், நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவை ஒட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.

