/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு போக்குவரத்து கழக ஓய்வு தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு
/
அரசு போக்குவரத்து கழக ஓய்வு தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு
அரசு போக்குவரத்து கழக ஓய்வு தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு
அரசு போக்குவரத்து கழக ஓய்வு தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு
ADDED : ஜூலை 29, 2025 10:58 PM

காஞ்சிபுரம்: அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் அறிவித்துள்ளனர்.
அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் மாநில தலைமை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று(ஜூலை 29) காஞ்சிபுரத்தில் நடந்தது.
கூட்டத்தில், கடந்த 24 மாதங்களில் ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை வழங்க கோரியும், மற்ற துறை ஊழியர்களை போல, போக்குவரத்து துறையினருக்கும் ஓய்வு பெறும் தினத்திலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அகவிலைப்படி நிலுவைத்தொகை மற்றும் கோர்ட் உத்தரவுப்படி சேமநலநதி தொகையை வழங்க வேண்டும் எனவும், ஓய்வு பெற்றோருக்கும் மருத்துவப்படி மற்றும் முதல்வர் மருத்துவ காப்பீடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில், அக்.,7 ம் தேதி சென்னையில், 3 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில தலைவர் கதிரேசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தலைமை நிர்வாகிகள் பாண்டி, மணிகண்டராஜ், ஆரோக்கியராஜ், மோகன், முருகேசன், சொக்கலிங்கம், சின்னராமு, ஆறுமுகம், துலுக்காணம், ஜீவானந்தம் ஆகியோர் உரையாற்றினர்.