/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலவாக்கம், கீழ்கதிர்பூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு
/
சாலவாக்கம், கீழ்கதிர்பூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு
சாலவாக்கம், கீழ்கதிர்பூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு
சாலவாக்கம், கீழ்கதிர்பூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு
ADDED : மே 15, 2025 06:45 PM
காஞ்சிபுரம்:தமிழக அரசின் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், அனைத்து துறையின் மானிய கோரிக்கை அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டன. அதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் .கணேசன், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டு புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, தொழிற்பயிற்சி நிலையம் எங்கு அமையும் எனவும், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்ற கேள்விகள் மாணவர்கள், பெற்றோரிடையே எழுந்தது.
ஆனால், உடனடியாக இரு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமையும் இடங்களை, மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. உத்திரமேரூர் தாலுகா சாலவாக்கத்திலும், காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்திலும் தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இடம் தேர்வு செய்யப்பட்டிருப்பதான அரசு அறிவிப்புகள் அந்தந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் அறிவிப்பாக ஒட்டப்பட்டுள்ளன. தலா மூன்று ஏக்கர் பரப்பளவில் அமையக்கூடிய இந்த இடங்களை, கலெக்டர் உத்தரவை தொடர்ந்து, வேலைவாய்ப்பு மற்றும் பயற்சித் துறைக்கு ஒப்படைப்பர்.
அதைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறை இந்த இடத்தில், தொழிற்பயிற்சிக்கான கட்டுமானத்தை பொதுப்பணித் துறை மேற்கொள்ளும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரகடத்தில் ஏற்கனவே ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வரும் நிலையில், சாலவாக்கம், கீழ்கதிர்பூர் என, மேலும் இரு அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைவது, கிராமப்புற மாணவர்களுக்கு பயன் அளிக்கும்.
உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து, 40 கி.மீ., துாரம் சென்று பயின்று வந்த நிலையில், காஞ்சிபுரம், உத்திரமேரூர் தாலுகாவிலேயே தொழிற் பயிற்சி நிலையம் அமைவது, வீட்டருகே எளிதாக சென்று வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பின்படி, தொழிற்பயிற்சி நிலையம் அமைவதற்கான இடங்கள் தேர்வாகியுள்ளன.
இடத்தை எங்களிடம் வருவாய் துறை ஒப்படைத்த பின், கட்டட மதிப்பு தயாரித்து அரசுக்கு அனுப்பப்படும்.
அதைத் தொடர்ந்து, கட்டடம் கட்ட, நிதி வழங்கியவுடன், கட்டட பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.