/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் தடம் மாற்றியமைக்க பணம் வசூலிப்பு கோவிந்தவாடி கிராம வாசிகள் கொந்தளிப்பு
/
மின் தடம் மாற்றியமைக்க பணம் வசூலிப்பு கோவிந்தவாடி கிராம வாசிகள் கொந்தளிப்பு
மின் தடம் மாற்றியமைக்க பணம் வசூலிப்பு கோவிந்தவாடி கிராம வாசிகள் கொந்தளிப்பு
மின் தடம் மாற்றியமைக்க பணம் வசூலிப்பு கோவிந்தவாடி கிராம வாசிகள் கொந்தளிப்பு
ADDED : பிப் 13, 2025 08:00 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெரு வழியாக, 11 கிலோ வாட் மின் வழித்தடம் செல்கிறது. இந்நிலையில், மாடியில் சென்ற சிறுவன் மீது, மின்கம்பி உரசியதில் கால் விரல்கள், தலை உள்ளிட்ட சில பகுதிகளில் காயம் ஏற்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குடியிருப்புகளை ஒட்டிச் செல்லும் மின்வழித்தடத்தை அகற்ற வேண்டும் என, மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீது மின்வாரியம் ஆய்வு செய்து, திட்ட அறிக்கை தயாரித்துள்ளது.
முன் வைப்பு தொகை, மாநில சேவை வரி, மத்திய சேவை வரி உள்ளிட்ட கட்டணங்களுடன் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், நுகர்வோரிடம் கட்டணமாக எந்த ஒரு தொகையும் குறிப்பிடவில்லை.
இருப்பினும், மின் வழித்தடத்தை மாற்றி அமைக்க, குடியிருப்புவாசிகள், 60,000 ரூபாய் மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டும் என, மின் ஊழியர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, கோவிந்தவாடி ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:
மின் வழித்தடம் இடமாறுதலுக்கு, நுகர்வோர் பங்களிப்பு எதுவும் இல்லாத போது, எங்களிடம் பணம் கேட்பது எந்தவிதத்தில் நியாயம். ஏற்கனவே, மின் வழித்தடத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் குடும்பத்திற்கு, மின் வாரியம் இழப்பீடு வழங்காத போது, மின் வழித்தடம் மாற்ற எவ்வாறு பணம் செலுத்த முடியும் என தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

