/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு கோவிந்தவாடி ஏரிக்கரை சேதம்
/
பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு கோவிந்தவாடி ஏரிக்கரை சேதம்
பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு கோவிந்தவாடி ஏரிக்கரை சேதம்
பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு கோவிந்தவாடி ஏரிக்கரை சேதம்
ADDED : ஜன 27, 2024 11:39 PM

காஞ்சிபுரம்,சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை போடும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, பிரதான கிராமப்புற கடவுப்பாதைகளில், உயர்மட்ட பாலம் மற்றும் ஏரி நடுவே உயர்மட்ட கட்டும் பணி நிறைவு பெற்று உள்ளது.
இரண்டாவது கட்டமாக, சாலை போடும் பணிக்கு, ஆளுயரத்திற்கு மண்ணை கொட்டி நிரப்பும் பணியை செய்து வருகின்றனர்.
இதில், காஞ்சிபுரம் - அரக்கோணம் மின்சார ரயில் கடவுப்பாதை மற்றும் காஞ்சிபுரம் - அரக்கோணம் நான்குவழி சாலை கடவுப்பாதைக்கு சவுகரியமாக உயர்மட்ட பாலப் பணி நடந்து வருகிறது.
இந்த பணிக்கு, கோவிந்தவாடி ஏரிக்கரை சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
இதை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சேதப்படுத்தப்பட்டிருக்கும் ஏரிக்கரையை முறையாக சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.