/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
274 ஊராட்சிகளில் வரும் 1ல் கிராம சபை கூட்டம்
/
274 ஊராட்சிகளில் வரும் 1ல் கிராம சபை கூட்டம்
ADDED : அக் 29, 2025 11:11 PM
காஞ்சிபுரம்: உள்ளாட்சி தினமான நவ.,1ல் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வரும் 1ம் தேதி காலை 11:00 மணிக்கு, உள்ளாட்சி தினம், 274 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊரக வேலை உறுதி திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
துாய்மை பாரத இயக்கம், வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்றவை ஆன்லைனில் செலுத்தும் முறை குறித்து விவாதித்தல் போன்றவை கிராம சபையில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

