/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரும் 15ல் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
/
வரும் 15ல் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
ADDED : ஆக 10, 2025 09:57 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும், சுதந்திர தினத்தன்று, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
கிராம ஊராட்சிகளில், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம், தொழிலாளர் தினம் போன்ற நாட்களில், கிராம சபை கூட்டம் நடத்தப் படுகிறது.
அந்த வகையில், வரும் 15ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது போன்றவை குறித்து விவாதிக்கப்படும்.
மேலும், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு - செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்த வேண்டும் என, கிராம ஊராட்சிகளுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.