/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜல்லிகள் பெயர்ந்த சேர்ப்பாக்கம் சாலை
/
ஜல்லிகள் பெயர்ந்த சேர்ப்பாக்கம் சாலை
ADDED : மார் 20, 2025 12:58 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, தண்டரை கிராமத்தில் இருந்து சேர்ப்பாக்கம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி அப்பகுதியைச் சேர்ந்தோர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
தற்போது, இச்சாலை, முறையாக பராமரிப்பு இல்லாமலும், சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்தும் உள்ளன. அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகளால் நிலைத்தடுமாறி, விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சேதமடைந்த சாலையை சீரமைக்க துறை அதிகாரிகளுக்கு, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.